states

img

அயோத்தியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு  

அயோத்தி அருகே இன்று மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தி அருகே இன்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.  அயோத்திலிருந்து 176 கி.மீ தொலைவிலும், 15 கி.மீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.